/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அஸ்வினி மருத்துவமனையில் நவீன லேசர் சிகிச்சை டாக்டர் வெங்கடேஷ் பெருமிதம்
/
அஸ்வினி மருத்துவமனையில் நவீன லேசர் சிகிச்சை டாக்டர் வெங்கடேஷ் பெருமிதம்
அஸ்வினி மருத்துவமனையில் நவீன லேசர் சிகிச்சை டாக்டர் வெங்கடேஷ் பெருமிதம்
அஸ்வினி மருத்துவமனையில் நவீன லேசர் சிகிச்சை டாக்டர் வெங்கடேஷ் பெருமிதம்
ADDED : ஆக 02, 2024 02:02 AM

விழுப்புரம் மாவட்டத்தில் அதிநவீன லேசர் சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனையாக விழுப்புரம் அஸ்வினி மருத்துவமனை உள்ளது என டாக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
விழுப்புரம் நகரில் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த அதிநவீன லேசர் சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனையாக நேருஜி ரோட்டில் உள்ள அஸ்வினி மருத்துவமனை உள்ளது.
இங்கு, மூலம், பவுத்திரம், வெடிப்பிற்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. துளை அறுவை சிகிச்சைகளாக அப்பண்டிக்ஸ், பித்தப்பை கல், குடலிறக்கம், கர்ப்பபை அகற்றுதல், கர்ப்பபை கட்டி மட்டும் அகற்றுதல், சினைப்பை கட்டி அகற்றுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எண்டோஸ்கோப்பி சிகிச்சைகளாக, வயிறு பரிசோதனை, மலக்குடல், பெருங்குடல் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், தைராய்டு, மார்பக கட்டி, விரைவீக்கம், தீராத கால்புண், கால் நரம்பு சுற்று உட்பட அனைத்து வகை கட்டிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து வகை அறுவை சிகிச்சைகளும், பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் மூலம் இலவசமாக செய்யப்படுகிறது.
மலக்குடல் புற்றுநோயை கண்டறிதல் தற்போது மிகவும் எளிதாகும். சிக்மாய்டோஸ்கோபி எனும் குடல் உள்நோக்கி பரிசோதனை மூலம் விரைவாக கண்டறியலாம். அதே போல் மூலம், வெடிப்பு, பவுத்திரம் நோய்களுக்கு முன்பு போல பெரிய அறுவை சிகிச்சை இல்லாமல் தற்போது லேசர் சிகிச்சை மூலம் பெரிய காயம், வலியின்றி ஒரே நாளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வசதியுள்ளது. இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே கிடைத்த இந்தவகை அதிநவீன லேசர் சிகிச்சை தற்போது விழுப்புரம் நகரத்திலே குறைந்த செலவில் செய்யப்படுகிறது.
இவ்வாறு டாக்டர் வெங்கடேஷ் கூறினார்.