/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜி.எஸ்.டி.,யால் பொருட்கள் விலையேற்றம் மோடிதான் காரணம்: மஸ்தான் பேச்சு
/
ஜி.எஸ்.டி.,யால் பொருட்கள் விலையேற்றம் மோடிதான் காரணம்: மஸ்தான் பேச்சு
ஜி.எஸ்.டி.,யால் பொருட்கள் விலையேற்றம் மோடிதான் காரணம்: மஸ்தான் பேச்சு
ஜி.எஸ்.டி.,யால் பொருட்கள் விலையேற்றம் மோடிதான் காரணம்: மஸ்தான் பேச்சு
ADDED : ஏப் 17, 2024 11:35 PM

திண்டிவனம் : ஏழை மக்கள் மீது ஜி.எஸ்.டி., வரியை சுமத்தி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு மோடிதான் காரணம்' என தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசினார்.
விழுப்புரம் லோக்சாப தொகுதி வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திண்டிவனத்தில் நேற்று கூட்டணி கட்சி சார்பில் பிரசரத்தின் போது அவர் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்கிார். காலை சிற்றுண்டி திட்டம், மகளிர்க்கு 1000 ரூபாய், கல்லுாரி மாணவிகளுக்கு மாதம் 1000, முதியோர்களுக்கு 1,200, மாற்றுத் திறனாளிகளுக்கு 1,500 ரூபாய், இல்லம் தேடி மருத்துவம் என பல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு டில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யச் சொன்னால், 10 பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்துள்ளார்.
ஏழை மக்கள் மீது ஜி.எஸ்.டி.,வரியை சுமத்தி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு மோடிதான் காரணம்' என்றார்.
தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர் ரமணன், நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கவுன்சிலர்கள் ரேகா நந்தகுமார், சந்திரன், பார்த்திபன், நகர துணைச் செயலாளர் கவுதமன், நகர காங்., தலைவர் விநாயகம், வி.சி., மாவட்ட செயலாளர் திலீபன், பொறுப்பாளர்கள் இளஞ்சரேன், நசீர்அகமது, மா.கம்யூ., முனியாண்டி, ராமதாஸ், இந்திய கம்யூ., இன்பஒளி உட்பட பலர் பங்கேற்றனர்.

