/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதானி, அம்பானி இருவருக்காக மட்டுமே மோடி ஆட்சி நடத்துகிறார்: மாஜி அமைச்சர் சண்முகம் எம்.பி., காட்டம்

ADDED : ஏப் 17, 2024 11:43 PM

விழுப்புரம், : விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜை ஆதரித்து மாவட்ட செயலாளர் சண்முகம் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜை ஆதரித்து, அக்கட்சி மட்டுமின்றி கூட்டணி நிர்வாகிகள் தீவிரமாக ஓட்டு சேகரித்தனர்.
இறுதிகட்ட பிரசாரத்தை, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் வேட்பாளர் பாக்கியராஜ் ஆகியோர் நேற்று மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் காமராஜர் சாலையில் துவக்கினர். இருவரும் நடந்து சென்று வியாபாரிகள், மக்களிடம் ஓட்டு சேகரித்தனர்.
இதில் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது,
மத்தியில் பத்தாண்டுகள் மோடி ஆட்சியிலும், மாநிலத்தில் 3 ஆண்டுகள் தி.மு.க., ஆட்சியிலும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பா.ஜ.,வின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை.
அதானி, அம்பானி ஆகிய இருவருக்காக மட்டுமே நடக்கும் மோடி ஆட்சியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். தி.மு.க., தனது குடும்பத்திற்காக கொள்ளையடித்து கொண்டிருக்கிறது. பா.ஜ., தலைவர்கள் ரோடு ஷோ என்ற பெயரில் இறுதி யாத்திரை நடத்துகின்றனர். இன்னும் 4 நாட்களில் அவர்களுக்கு சாவுமணி அடிக்க போகிறது.
ஜனநாயகத்தை காப்பாற்ற, தனிமனித சுதந்திரத்தை காக்க மக்கள் சிந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுபோட வேண்டும். இல்லையெனில் உங்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என கூறினார். நகர செயலாளர்கள் ராமதாஸ், பசுபதி, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.