/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
மகளிர் கல்லுாரியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : செப் 04, 2024 11:09 PM
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, சென்னை கிறித்தவ கல்லுாரியோடு இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியது.
மகளிர் கல்லுாரி முதல்வர் அகிலா, கிறித்தவ கல்லுாரி முதல்வர் வில்சன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின், ஆசிரியர்கள், மாணவர்களோடு சென்னை கிறித்தவ கல்லுாரி வளாகத்தை பார்வையிட்டனர்.
எம்.சி.சி.எம்., ஆர்.எப்., கண்டுபிடிப்பு பூங்கா, எம்.சி.சி.,யில் சமூக ஈடுபாடு, கூட்டு ஆராய்ச்சி வெளியீடுகள், வேலைவாய்ப்பு பிரிவில் முயற்சிகள், இண்டர்ன்ஷிப், ஆசிரியர்கள், மாணவர்களின் பரிமாற்றம் ஆகிய கூட்டு கல்வி, ஆராய்ச்சி திட்டங்கள் ஆகியவை இந்த புத்தாக்க திட்டத்தில் உள்ளது.