/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தையூரில் விவசாயம் செழிக்க முளைப்பாரி திருவிழா
/
தையூரில் விவசாயம் செழிக்க முளைப்பாரி திருவிழா
ADDED : மே 24, 2024 05:56 AM

செஞ்சி: தையூர் கிராமத்தில் விவசாயம் செழிக்க பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
செஞ்சி அடுத்த தையூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் நெல் நாற்று விட்டனர். இதை தொடர்ந்து தினமும் வேம்பியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. 8ம் நாள் விழாவாக நேற்று முன்தினம் முளைப்பாரி திருவிழா நடந்தது.
இதில் நெல் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து புதிய நாற்றுகளை பெண்கள் மேள, தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
கோவிலில் சிறப்பு படையலிட்டு, நாற்றுக்களை அம்மனுக்கு நேர்த்தி கடனாக செலுத்தினர்.
தொடர்ந்து சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், அன்று மாலை சுாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு வீதியுலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் தென்னரசு மற்றும் விழா குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.