/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழைநீர் தேங்கிய பள்ளம் நகராட்சி நிர்வாகம் சீரமைப்பு
/
மழைநீர் தேங்கிய பள்ளம் நகராட்சி நிர்வாகம் சீரமைப்பு
மழைநீர் தேங்கிய பள்ளம் நகராட்சி நிர்வாகம் சீரமைப்பு
மழைநீர் தேங்கிய பள்ளம் நகராட்சி நிர்வாகம் சீரமைப்பு
ADDED : மே 24, 2024 05:48 AM
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் பள்ளங்களில் தேங்கிய மழைநீர் நகராட்சி மூலம் மண் கொட்டி சீரமைக்கப்பட்டது.
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் திடீரென கன மழை பெய்தது. இதனால், நகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதையொட்டி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்காத வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் குளமாக தேங்கிய பகுதிகளில் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மழைநீரை வெளியேற்றி மண் கொட்டி பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், விழுப்புரம், கே.கே., ரோடு மணி நகர் பகுதியில் பாதாள சாக்காடைக்காக பள்ளம் தோண்டி மூடிய நிலையில், மழையால் மீண்டும் அங்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள பொதுமக்கள் வாகனங்களில் கே.கே., ரோடு பகுதிக்கு செல்ல பெரிதும் சிரமப்பட்டனர்.
பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், நகராட்சி நிர்வாகம் ஊழியர்கள் மூலம் அந்த பள்ளத்தை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மண் கொட்டி சீரமைத்தனர்.