/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்று கட்சி என்பதால் வார்டை புறக்கணிக்கும் நகராட்சி கவுன்சிலர் வடிவேல் பழனி குற்றச்சாட்டு
/
மாற்று கட்சி என்பதால் வார்டை புறக்கணிக்கும் நகராட்சி கவுன்சிலர் வடிவேல் பழனி குற்றச்சாட்டு
மாற்று கட்சி என்பதால் வார்டை புறக்கணிக்கும் நகராட்சி கவுன்சிலர் வடிவேல் பழனி குற்றச்சாட்டு
மாற்று கட்சி என்பதால் வார்டை புறக்கணிக்கும் நகராட்சி கவுன்சிலர் வடிவேல் பழனி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 18, 2024 11:28 PM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 28 வது வார்டு புறக்கணிக்கப்படுவதாக கவுன்சிலர், நகராட்சி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வார்டு கவுன்சிலர் வடிவேல் பழனி கூறியதாவது:
கடந்த இரண்டரை ஆண்டுகளாக விழுப்புரம் நகரில் 28வது வார்டு கவுன்சிலராக உள்ளேன். இங்குள்ள துரைகண்ணு லே-அவுட், துரைசாமி லே-அவுட், ராமமூர்த்தி லே-அவுட் பகுதிகளில் வடிகால் வாய்க்கால், தார்சாலை அமைத்து தர பல முறை கமிஷனர், நகரமன்ற தலைவரிடம் முறையிட்டும் தற்போது வரை அமைத்து தரவில்லை. மேலும், தர்மராஜர் தெருவில் தனியார் பள்ளி ஆக்கிரமித்துள்ள கோலியனுாரான் வாய்க்காலும் துார்வாராமல் உள்ளது.
ராஜிவ்காந்தி நகரில் தார்சாலை, தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. மணி நகரில் 1, 2, 3, 4வது வீதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தையும் சரியாக மூடாமல் பொதுமக்கள் தெருவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதற்காக நான் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மணி நகரில் குடிநீர் வரி செலுத்தியும் தற்போது வரை அதற்கான இணைப்புகளை வழங்கவில்லை. ராஜிவ்காந்தி நகரில் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வெகுதுாரம் பாரதியார் வீதி வரை செல்ல வேண்டியுள்ளது.
இதற்காக முக்தி அருகேவுள்ள அரசு இடத்தை தேர்வு செய்து, புதிய ரேஷன் கடை கட்டித்தர கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. நான், மாற்று கட்சி கவுன்சிலர் என்பதால், எனது வார்டை நகராட்சி முற்றிலுமாக புறக்கணிக்கிறது.
அரசியல் செய்யாமல், இங்குள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை கருத்தில் கொண்டு, சரிசெய்து தர நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வடிவேல் பழனி கூறினார்.