ADDED : மார் 24, 2024 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விக்கிரவாண்டி பாரதி நகர் பகுதியிலுள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் உற்சவத்தை முன்னிட்டும் புதியதாக உற்சவர் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் சுவாமி சிலைகள் செய்து பிரதிஷ்டை செய்வதை முன்னிட்டு கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்து.
உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு அலங்காரம் செய்து வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு வைதீக முறைப்படி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விக்கிரவாண்டி சந்திரசேகர் குருக்கள் தலைமையில் அபிேஷகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு சுவாமி வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்தது.

