/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முருக்கேரி, சிறுவாடி நடைபாதை ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்குமா?
/
முருக்கேரி, சிறுவாடி நடைபாதை ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்குமா?
முருக்கேரி, சிறுவாடி நடைபாதை ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்குமா?
முருக்கேரி, சிறுவாடி நடைபாதை ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்குமா?
ADDED : ஜூன் 11, 2024 06:48 AM
மரக்காணம்: மரக்காணம் அடுத்த சிறுவாடி, முருக்கேரியில் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் வரை உள்ள 32 கி.மீ., இருவழி சாலையை கடந்த 2021-22ம் ஆண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 238 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிசாலை பணிகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் சாலை பணியின் போது முருக்கேரி, சிறுவாடி பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை பெயரளவில் அகற்றி சாலையின் இரு புறத்திலும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைத்துள்ளனர்.
நான்கு வழி சாலை பணி என்பதால், சாலையின் நடுவில் மரச்செடிகள் வைப்பதற்கு சென்டர் மீடியன் கட்டை அமைக்கப்பட்டுள்ளது.
சிறுவாடி, முருக்கேரியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சாலையில் நடந்து வந்தால் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக இருக்கும் என்பதால், சாலையின் இரு புறத்தில் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால் மேல் பகுதியை நடைபாதையாக பயன்படுத்தி கொள்ளவும், மேலும் நடைபாதையை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக மழை நீர் வடிகால் வாய்க்கால் மேல் பகுதிகளை தகடுகள் வைத்தும், இரும்பு துாண்கள் நட்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாததால், சாலையின் நடந்து செல்கின்றனர்.
மேலும் சாலையின் இரு புறத்திலும் வாகனங்களை நிறுத்திவைப்பதால், பஸ்சில் இருந்து பயனிகளை இறக்கி விடுவதில் பெரும் சிரமம் ஏற்படுகின்றது.
சாலையை ஆக்கிரமிப்பு செய்து ஆட்டோ, கார், பைக்குகளை நிறுத்திவைப்பதால், பேருந்துகள் நிறுத்தும் போது பின்புறம் வரும் வாகனங்கள் சைடுவாங்கி செல்லமுடியாமல் உள்ளது.
இதனால் தினந்தோரும் போக்குவரத்து பதிப்பு ஏற்படுகின்றது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.