sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

/

முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 30, 2024 06:17 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி வழுக்காம்பாறை முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவையொட்டி, கடந்த 27ம் தேதி புதிய விக்கிரகங்கள் கரிக்கோல ஊர்வலமும், அன்று இரவு 9:00 மணிக்கு முத்துமாரியம்மன், விநாயகர், முருகர், நவக்கிரகம் உள்ளிட்ட சிலைகளை பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தன மருந்து சாற்றி, கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசமும், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், கலச ஸ்தாபிதம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.

நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை துவங்கியது. 9:30 மணிக்கு நாடி சந்தானம், 9:45 மணிக்கு மகா பூர்ணாகுதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும், 10:15 மணிக்கு செல்லபிராட்டி ஈஸ்வரன் குருகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 10:30 மணிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.

செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us