ADDED : மே 13, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தங்கையைக் காணவில்லை என அண்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த சித்தாத்துார் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகள் சுவேதா, 20; பத்தாம் வகுப்பு வரை பயின்று விட்டு வீட்டிலிருந்தார். இவரை கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது சகோதரர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.