/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்
/
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்
ADDED : ஜூன் 20, 2024 08:19 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 14ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியத. இன்றுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.
நேற்று மதியம் 12:05 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'விக்கிரவாண்டி தொகுதியில் முக்கிய பிரச்னையான நந்தன் கால்வாய் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன்' என்றார்.
கட்சியின் தலைமை நிர்வாகிகள் செகதீச பாண்டியன், அன்பு, தென்னரசு, நாதன், இயக்குனர் களஞ்சியம் உட்பட பலர் பலர் உடனிருந்தனர்.
நேற்று மேலும், இந்திய குடியரசு கட்சி சார்பில் சேகர், 58; மற்றும் 3 சுயேச்சைகள் உட்பட 6 பேர் மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை 26 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.