/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய கருத்தரங்கு போட்டி சூர்யா கல்லுாரிக்கு விருது
/
தேசிய கருத்தரங்கு போட்டி சூர்யா கல்லுாரிக்கு விருது
தேசிய கருத்தரங்கு போட்டி சூர்யா கல்லுாரிக்கு விருது
தேசிய கருத்தரங்கு போட்டி சூர்யா கல்லுாரிக்கு விருது
ADDED : மே 10, 2024 01:04 AM

விக்கிரவாண்டி: தேசிய கருத்தரங்கு போட்டியில் சூர்யா பார்மசி கல்லுாரி மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி சூர்யா பார்மசி கல்லுாரி முதுநிலை மற்றும் இளநிலை இறுதி ஆண்டு மாணவ, மாணவியர்கள் டில்லி, இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜியில் நடந்த மருந்தியல் தொடர்பாக 8வது தேசிய கருத்தரங்கு போட்டி நடந்தது. கல்லுாரி பேராசிரியை ரீட்டா விஜயராணி தலைமை தாங்கினார்.
மாணவ, மாணவியர்கள் முதுநிலை படிப்பு மாணவியர்கள் தென்னரசி, ஓசியா, இளநிலை படிப்பு மாணவர்கள் சாய் பாலாஜி, அருண் குமார், சுப லட்சுமி ஆகியோர் கருத்தரங்கில் பேசினர். தேசிய அளவில் 35 கல்லுாரிகளிலிருந்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில், சூர்யா பார்மசி கல்லுாரி மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்ஸ்டியூட் சார்பில் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களை கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி, முதல்வர் அன்பழகன் ஆகியோர் பாராட்டினர்.