/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிறந்த குழந்தை இறப்பு போலீஸ் விசாரணை
/
பிறந்த குழந்தை இறப்பு போலீஸ் விசாரணை
ADDED : ஆக 26, 2024 12:26 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பிரசவத்தின் போது குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம் அருகே உள்ள கோட்டிகுப்பம், பள்ளத்தெருவில் வசிப்பவர் நந்தகோபால். இவரது மனைவி சங்கீதா, 28; நிறைமாத கர்ப்பிணி. பிரசவத்திற்காக திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கத்திலுள்ள தயார் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில் பிரவச வலி ஏற்பட்டதால் அருகில் உள் ஆவணப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சங்கீதா சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் உடல் நிலை மோசமானதால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மாலை 5:00 மணிக்கு இறந்தது.
புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.