/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரக்காணத்தில் புதிய நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
/
மரக்காணத்தில் புதிய நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
மரக்காணத்தில் புதிய நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
மரக்காணத்தில் புதிய நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
ADDED : செப் 01, 2024 05:03 AM

மரக்காணம் : மரக்காணத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
திண்டிவனம் தாலுகாவில் இருந்து மரக்காணத்தை தனி தாலுகாவாக மாற்றிய பின் தாலுகா அலுவலகம், நீதிமன்றம், கிளைச் சிறை, துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நேற்று மரக்காணம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா ஆய்வு மேற்கொண்டார்.
தாசில்தார் பாலமுருகன் இடம் குறித்து விளக்கமளித்தார். நீதிதுறை அலுவலர்கள், வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.