/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பத்தாம் வகுப்பு தேர்வில் நியூ ஜான்டூயி பள்ளி சாதனை
/
பத்தாம் வகுப்பு தேர்வில் நியூ ஜான்டூயி பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு தேர்வில் நியூ ஜான்டூயி பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு தேர்வில் நியூ ஜான்டூயி பள்ளி சாதனை
ADDED : மே 13, 2024 05:55 AM

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், விழுப்புரம் நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர் சாரதிதாசன் 500க்கு 484, ஹரிபிரசாத் 480, மாணவர்கள் கோபிநாத், கிருபாநிதி 479 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். மேலும், கணிதத்தில் 6 பேர் சென்டம் எடுத்துள்ளனர்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, தாளாளர் வீரதாஸ் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். செயலாளர் ெஷர்லி வீரதாஸ், நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின், முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா மற்றும் பள்ளி முதல்வர், பொறுப்பாசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.