/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய புறநகர பஸ்கள் இயக்கம்: அமைச்சர் துவக்கி வைப்பு
/
புதிய புறநகர பஸ்கள் இயக்கம்: அமைச்சர் துவக்கி வைப்பு
புதிய புறநகர பஸ்கள் இயக்கம்: அமைச்சர் துவக்கி வைப்பு
புதிய புறநகர பஸ்கள் இயக்கம்: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : செப் 10, 2024 12:18 AM

விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், புதிய புறநகர் பஸ்களை அமைச்சர் பொன்முடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பொன்முடி, புதிய புறநகர் பஸ்களை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் 6 புதிய புறநகர பஸ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலுார் - விழுப்புரம் - புதுச்சேரி வரை முகையூர், விழுப்புரம், வளவனுார், மதகடிப்பட்டு வழித்தடத்திலும், விழுப்புரம் - புதுச்சேரி வரையிலும், விழுப்புரம் - புதுச்சேரி - திருச்சி வரையிலும், புதுச்சேரி - ஆரோவில் வழித்தடத்திலும், விழுப்புரம் - புதுச்சேரி - சேலம் வரை வழித்தடங்களில் பஸ்கள் இயங்குகிறது.
விழுப்புரம் மண்டலத்திற்கு ஒதுக்கீடு செய்த 81 புதிய பஸ்களில் தற்போது வரை 51 புதிய புறநகர பஸ்கள் மற்றும் 15 புதிய மகளிர் விடியல் பயண நகர பஸ்கள் உட்பட மொத்தம் 66 பஸ்கள் தடத்தில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற துணைத் தலைவர் சித்திக்அலி, விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குணசேகரன், பொது மேலாளர் சதீஷ்குமார் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.