/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மீண்டும் 3 நெம்பர் லாட்டரி ஆதிக்கம்; 'கிடுக்கிப்பிடி' நடவடிக்கை தேவை
/
மீண்டும் 3 நெம்பர் லாட்டரி ஆதிக்கம்; 'கிடுக்கிப்பிடி' நடவடிக்கை தேவை
மீண்டும் 3 நெம்பர் லாட்டரி ஆதிக்கம்; 'கிடுக்கிப்பிடி' நடவடிக்கை தேவை
மீண்டும் 3 நெம்பர் லாட்டரி ஆதிக்கம்; 'கிடுக்கிப்பிடி' நடவடிக்கை தேவை
ADDED : ஆக 06, 2024 06:51 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தொழிலாளர்களை பாதிக்கும் தடை செய்யப்பட்ட 3 நெம்பர் லாட்டரி விற்பனை மீண்டும் தலை துாக்கியுள்ளதை போலீசார் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 நெம்பர் லாட்டரி எனப்படும், ஆன் லைன் லாட்டரி விற்பனை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக இருந்தது. அதில் ஈடுபட்ட பல்வேறு தொழிலாளர்கள் குடும்பத்தினர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதனால், தனிப்படை போலீசார் மூலம், போலீசார் அதிரடி ரெய்டு மேற்கொண்டு கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் மீண்டும் அந்த 3 நெம்பர் லாட்டரியின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளதால், பல தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் வழுதரெட்டி பைபாஸ் சந்திப்பு, வண்டிமேடு, முத்தோப்பு, ரயில்நிலைய குடியிருப்பு, நகராட்சி மைதானம் உள்ளிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் ரகசிய தகவலை பரப்பி, அதில் அடிமையாக உள்ள கூலி தொழிலாளர்களிடம் ஆசையை துாண்டி விற்பனை செய்கின்றனர்.இது குறித்து, போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.