/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒலக்கூர் கூட்ரோட்டில் செயல்படாமல் உள்ள ைஹமாஸ் விளக்கு: விபத்து ஏற்படும் அபாயம் நகாய் அதிகாரிகளின் நடவடிக்கை தேவை

ADDED : ஏப் 27, 2024 12:29 AM

திண்டினவம் : ஒலக்கூர் கூட்ரோட்டில் ஒரங்கட்டப்பட்டுள்ள ைஹமாஸ் விளக்கு, பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம்-சென்னை சாலையிலுள்ள ஒலக்கூர் கூட்ரோட்டில் பல ஆண்டுகளாக ைஹமாஸ் விளக்கு பயன்பாட்டில் இருந்து வந்தது. அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் இருந்த ைஹமாஸ் விளக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாத புயல் எச்சரிக்கை காரணமாக, உயர்கோபுர கம்பத்தின் மேல் இருந்த ைஹமாஸ் விளக்குகள், காற்றில் சரிந்து விழாமல் இருப்பதற்காக, கீழ் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
புயல் எச்சரிக்கை முடிந்த பிறகு, பல இடங்களில் கீழே இறக்கிவிடப்பட்ட ைஹமாஸ் விளக்குகள் மீண்டும் மேல்பகுதிக்கு கொண்டு சென்று, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் ஒலக்கூர் பகுதியில் கீழே இறக்கிவிடப்பட்டிருந்த ஹைமாஸ் விளக்குகளை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஒலக்கூர் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பல மாதங்கள் கடந்தும், மீண்டும் அந்த இடத்தில் ைஹமாஸ் விளக்குகள் பொறுத்தப்படாமல் உள்ளது. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளதால், ஒலக்கூர் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு தொடர்ந்து வருகின்றது .
பெரிய அளவில் விபத்து நடப்பதற்குள் நகாய் அதிகாரிகள், மீண்டும் ஒலக்கூர் கூட்ரோட்டில் ைஹமாஸ் விளக்கு எரிவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.