/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்வி வளர்ச்சியில் அக்கறையில்லை: அரசு மீது தமிழரசன் குற்றச்சாட்டு
/
கல்வி வளர்ச்சியில் அக்கறையில்லை: அரசு மீது தமிழரசன் குற்றச்சாட்டு
கல்வி வளர்ச்சியில் அக்கறையில்லை: அரசு மீது தமிழரசன் குற்றச்சாட்டு
கல்வி வளர்ச்சியில் அக்கறையில்லை: அரசு மீது தமிழரசன் குற்றச்சாட்டு
ADDED : செப் 02, 2024 06:54 AM

விழுப்புரம் : 'தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவதில் காட்டிய ஆர்வத்தை, கல்வி வளர்ச்சிக்கு காட்டவில்லை' என, இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் தமிழரசன் கூறினார்.
விழுப்புரத்தில் நேற்று நடந்த இந்திய குடியரசு கட்சி மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை தாமதமாக நடக்கிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனியார், நிதியுதவி பெறும் கல்லுாரிகளில் பட்டியலின மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்கின்றன. அதேபோல், தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தாண்டு, ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், மலைவாழ் மக்கள் மேம்பாட்டு பள்ளிகளில், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்துவதே தேர்ச்சி குறைவுக்கு காரணம்.
அரசு பள்ளிகளின் நிர்வாக சீர்கேட்டினால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவதில் காட்டுமு் ஆர்வத்தை கல்வி வளர்ச்சிக்கு காட்டுவதில்லை.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஆதி திராவிடர் நலத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை கண்டறிந்து, நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு தமிழரசன் கூறினார்.
மாநில பொறுப்பாளர்கள் மங்காப்பிள்ளை, கவுரிசங்கர், தன்ராஜ், மோகன், மலையராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.