/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய 30ம் தேதி பணி நாளாக அறிவிப்பு
/
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய 30ம் தேதி பணி நாளாக அறிவிப்பு
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய 30ம் தேதி பணி நாளாக அறிவிப்பு
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய 30ம் தேதி பணி நாளாக அறிவிப்பு
ADDED : மார் 21, 2024 11:52 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டாதல், அதனை ஈடு செய்யும் வகையில் வரும் 30ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த 14ம் நடந்த திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளான 14ம் தேதிக்கு பதிலாக, 23ம் தேதி பணி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால், நிர்வாக காரணங்களை முன்னிட்டு 23ம் தேதிக்கு பதிலாக, வரும் 30ம் தேதி மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணி நாளாக செயல்படும்.