ADDED : ஆக 08, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து 3ம் நாளாக செவிலியர்கள் குரல் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 3ம் நாளாக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க தலைவர் நாகவள்ளி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெலினா பிரேமாகுமாரி, பொருளாளர் பிரதீப், மாநில செயற்குழு சரவணன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மறு கட்டமைப்பு பெயரில் ஆள் குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணி புரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஸ்டாப் நர்ஸ் பதவியை நர்சிங் ஆபிசர் என பதவி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
