/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 06:49 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்க மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
மாவட்ட நிர்வாகிகள் பத்மாவதி, அமுதா, வித்யாவதனி, சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ரத்தினம் துவக்க உரையாற்றினார். செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் கடந்த தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதிகள் படி, அரசு ஊழியர்களுக்கு முறையான பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, இந்தாண்டு பட்ஜெட்டில் குறைந்த பட்ச சிறப்பு பென்ஷன் 6,750 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.