/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி பேரூராட்சி சார்பில் ஓ.ஆர்.ஏஸ்., கரைசல் வழங்கல்
/
செஞ்சி பேரூராட்சி சார்பில் ஓ.ஆர்.ஏஸ்., கரைசல் வழங்கல்
செஞ்சி பேரூராட்சி சார்பில் ஓ.ஆர்.ஏஸ்., கரைசல் வழங்கல்
செஞ்சி பேரூராட்சி சார்பில் ஓ.ஆர்.ஏஸ்., கரைசல் வழங்கல்
ADDED : மே 06, 2024 05:50 AM

செஞ்சி, : செஞ்சி பேரூராட்சி சார்பில் கோடை வெப்பத்தை சமாளிக்க உப்பு, சர்க்கரை கரைசல் (ஓ.ஆர்.எஸ்.,) பேரூராட்சி சார்பில் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகம் முழுதும் பொது மக்களை வாட்டி எடுக்கும் கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் உப்பு, சர்க்கரை கரைசல் (ஓ.ஆர்.எஸ்.,) வழங்கப்பட்டு வருகிறது. செஞ்சி பேரூராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் உப்பு, சர்க்கரை கரைசல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பேரூராட்சி சேர்மன் மொக்தியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, கவுன்சிலர்கள் கார்த்திக், சங்கர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.