/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பத்திரப்பதிவு ஆபீசில் ரெய்டு; ஒரு லட்சம் ரூபாய் சிக்கியது
/
பத்திரப்பதிவு ஆபீசில் ரெய்டு; ஒரு லட்சம் ரூபாய் சிக்கியது
பத்திரப்பதிவு ஆபீசில் ரெய்டு; ஒரு லட்சம் ரூபாய் சிக்கியது
பத்திரப்பதிவு ஆபீசில் ரெய்டு; ஒரு லட்சம் ரூபாய் சிக்கியது
ADDED : செப் 08, 2024 12:09 AM

மயிலம் : திண்டிவனம், சந்தைமேட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று மதியம், 2:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு தணிக்கை அலுவலர் ராணி மேற்பார்வையில் டி.எஸ்.பி., வேல்முருகன்தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அலுவலகத்தில் இருந்தவர்கள் வைத்திருந்த பணம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். திண்டிவனம் அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி கோவிந்தம்மாள், 48, வைத்திருந்த 40 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். உடன் அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அவர் தன் நிலத்தை விற்று பணம் பெற்றதற்கான ஆவணத்தை சமர்ப்பித்ததும், பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இறுதியில், கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 8,000 ரூபாய் மற்றும் 25,000 ரூபாய் மதிப்பில் இரண்டு வெள்ளி குங்குமச்சிமிழ், தட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கணக்கில் வராத பணம் குறித்து, சார் - பதிவாளர் சித்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.