/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகள் சொகுசு ஓய்வறை திறப்பு
/
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகள் சொகுசு ஓய்வறை திறப்பு
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகள் சொகுசு ஓய்வறை திறப்பு
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகள் சொகுசு ஓய்வறை திறப்பு
ADDED : ஆக 24, 2024 07:13 AM

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட குளிர்சாதன வசதிகொண்ட புதிய சொகுசு ஓய்வறை திறக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.23.50 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, புதிதாக குளிர் சாதன வசதியுடன் கூடிய பயணிகள் தங்கும் ஓய்வறை கட்டப்பட்டுள்ளது.
ரூ.70 லட்சம் மதிப்பில், ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள், இங்கு தங்கி ஓய்வெடுக்கும் வகையில் நவீன வசதிகளுடன் ஓய்வறை கட்டப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. ரவிக்குமார் எம்.பி., திறந்து வைத்தார். விழுப்புரம் ரயில்நிலைய மேலாளர் ராஜன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சுகுமார், தியாகராஜன், பயணிகள் உபயோகிப்பாளர் சங்க செயலர் தனபால், ரயில்வே அதிகாரிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் வழியாக 80க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கான கழிவறைகளுடன் கூடிய நவீன ஓய்வறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடம், 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. பயணி ஒருவருக்கு, 1 மணிநேரத்திற்கு குளிர்சாதன அறையில் ஓய்வெடுப்பதற்கு ரூ.30 கட்டணம். டீலக்ஸ் கழிவறையில், சிறுநீருக்கு ரூ.2, மலம் கழிக்க ரூ.3ம் செலுத்த வேண்டும். பயணிகள் பொருட்களை பாதுகாக்க 24 மணிநேரத்திற்கு ரூ.20 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. சொகுசு ஷோபாக்கள், டி.வி., உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன' என்றனர்.