/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒட்டை - வி.புதுப்பாக்கம் செல்லும் ஏரிக்கரை தார் சாலை படுமோசம்
/
ஒட்டை - வி.புதுப்பாக்கம் செல்லும் ஏரிக்கரை தார் சாலை படுமோசம்
ஒட்டை - வி.புதுப்பாக்கம் செல்லும் ஏரிக்கரை தார் சாலை படுமோசம்
ஒட்டை - வி.புதுப்பாக்கம் செல்லும் ஏரிக்கரை தார் சாலை படுமோசம்
ADDED : ஆக 26, 2024 12:26 AM

வானுார்: ஒட்டை கிராமத்தில் இருந்து வி. புதுப்பாக்கம் செல்லும் ஏரிக்கரை சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானுார் அடுத்த வி. புதுப்பாக்கம் கிராமத்தில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தினந்தோறும் வானுார் , புதுச்சேரி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பணிக்கு வந்து செல்கின்றனர்.
அதே போன்று ஏராளமான மாணவ, மாணவியர்கள், பள்ளி, கல்லுாரிக்கு வந்து செல்கின்றனர். இப்பகுதி மக்கள் அன்றாடம் வி.புதுப்பாக்கத்தில் இருந்து ஒட்டை வழியாக இரண்டு கிலோ மீட்டரில் உள்ள வானுார் மெயின் ரோட்டிற்கு வந்து செல்கின்றனர். இதே போன்று நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அமைந்துள்ள சாலை வழியாகவும் இந்த பகுதி மக்கள் வானுார் பகுதிக்கு வருகின்றனர்.
ஆனால் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும், பிரதான சாலையான ஒட்டை-புதுப்பாக்கம் ஏரிக்கரை சாலை (ஒரு கிலோ மீட்டர் சாலை) கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது, இந்த சாலையில் கருங்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி விட்டது.
ஆங்காங்கே 'மெகா சைஸ்' பள்ளங்கள் உருவெடுத்துள்ளதால், வாகனத்தில் செல்வோர் விழுந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக மழை காலங்களில் சாலையில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறி விடுவதால் சைக்களில் செல்வோர் முதல் பைக்கில் செல்வோர் வரை அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொது மக்களின் நலன் கருதி அப்பகுதியில் சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.