/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து வெளிநபர்கள் வெளியேற வேண்டும்'
/
'விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து வெளிநபர்கள் வெளியேற வேண்டும்'
'விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து வெளிநபர்கள் வெளியேற வேண்டும்'
'விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து வெளிநபர்கள் வெளியேற வேண்டும்'
ADDED : ஜூலை 08, 2024 04:56 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
இந்திய தேர்தல் ஆணையத்தால், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, இன்று (8ம் தேதி) மாலை 6 மணியுடன், தேர்தல் ஓட்டு சேகரிப்பு பிரசாரம் நிறைவடைகிறது.
இதனால், இன்று மாலை 6:00 மணிக்குமேல் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எவரும் ஓட்டு சேகரிப்பு பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், தனியார் வீடுகளில் தங்கி பிரசாரம் மேற்கொண்ட வெளியூர் நபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும், தேர்தல் நடத்தை விதிகளின்படி, தொகுதியில் தங்கிட அனுமதி கிடையாது. இதனை மீறி தங்கும்பட்சத்தில், தேர்தல் ஆணைய விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.