/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழா
/
பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழா
ADDED : ஆக 06, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த சின்ன கோட்டக்குப்பத்தில் ஸ்ரீபச்சை வாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை பச்சைவாழி அம்மனுக்கு 9 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மதியம் பூங்கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகம் முன் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.
இன்று 6ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் 7ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.