/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அம்மன் கோவில் விழாவில் சப்பரம் கவிழ்ந்ததால் பரபரப்பு
/
அம்மன் கோவில் விழாவில் சப்பரம் கவிழ்ந்ததால் பரபரப்பு
அம்மன் கோவில் விழாவில் சப்பரம் கவிழ்ந்ததால் பரபரப்பு
அம்மன் கோவில் விழாவில் சப்பரம் கவிழ்ந்ததால் பரபரப்பு
ADDED : ஆக 15, 2024 01:36 AM
கண்டாச்சிபுரம்:விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே உள்ள கடையம் கிராமத்தில் உள்ள சூளப்பிடாரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் தேர் திருவிழா துவங்கியது.
அன்று நள்ளிரவு சப்பரம் ஊர்வலம் நடந்தது. இந்த சப்பரத்தை நேற்று காலை 10:00 மணிக்கு, 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் தோளில் சுமந்து கடையம் கிராமத்தில் ஊர்வலமாக துாக்கி சென்றனர்.
அப்போது தெரு திருப்பத்தில் திரும்பியபோது, சப்பரம் நிலை தடுமாறி, கவிழ்ந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. திடுக்கிட்ட பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிலர் காயமடைந்தனர். அங்கு நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது.
சற்று நேரத்தில் கிராம மக்கள், விழுந்த சப்பரத்தை நிமிர்த்தி, மீண்டும் கோவிலுக்கு துாக்கி சென்றனர்.
தேரோட்டம் காரணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.