ADDED : ஏப் 15, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார், : வானுார் தொகுதியில் பதற்றமான ஓட்டுச்சாவடி பகுதியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதிக்குட்பட்ட வானுார் சட்டசபை தொகுதியில் கடப்பேரிக்குப்பம், எறையூர் கிராமங்கள் பதற்றமான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வாக்காளர்கள் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் அச்சமின்றி ஓட்டளிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் மேற்பார்வையில், வானுார் இன்ஸ்பெக்டர் சிவராஜன், ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சப் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சசிக்குமார், முத்துக்குமார், நடராஜ், கார்த்திகேயன் உட்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

