/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி விழுப்புரத்தில் கட்சியினர் கொண்டாட்டம்
/
த.வெ.க., மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி விழுப்புரத்தில் கட்சியினர் கொண்டாட்டம்
த.வெ.க., மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி விழுப்புரத்தில் கட்சியினர் கொண்டாட்டம்
த.வெ.க., மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி விழுப்புரத்தில் கட்சியினர் கொண்டாட்டம்
ADDED : செப் 09, 2024 04:44 AM

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் த.வெ.க., முதல் மாநாட்டுக்கு அனுமதி கிடைத்ததால் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில், நடிகர் விஜய் துவக்கியுள்ள த.வெ.க., கட்சியின் முதல் மாநாடு வரும் 23ல் நடத்த திட்டமிட்டு பணியை தொடங்கியுள்ளனர். இதற்காக 85 ஏக்கர் அளவில் இடத்தை தேர்வு செய்து வாடகை எடுத்து, மாநாடு நடத்தவும் போலீஸ் தரப்பில் அனுமதி கேட்டிருந்தனர். அந்த இடம், முக்கிய தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையோரம் என்பதால், போக்குவரத்து பாதிக்க வாய்ப்புள்ளதாலும், ஆளும் தி.மு.க., தரப்பில், விஜய் அரசியல் வருகைக்கு எதிராக சில விமர்சனங்கள் எழுந்ததாலும், மாநாடுக்கு அனுமதி கிடைப்பதில் சந்தேகம் எழுந்து வந்தது.
இந்நிலையில், மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் தரப்பில், நிபந்தனையுடன் நேற்று காலை அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, மதியம் 12:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் மோகன், சுரேஷ், வடிவேல் உள்ளிட்டோர் தலைமையில், த.வெ.க., வினர், விழுப்புரம் - திருச்சி சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரேயும், புதிய பஸ் நிலையம் முன்பும், கட்சி கொடியுடன் திரண்டு பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.