/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வயலில் இறங்கிய அரசு பஸ் பயணிகள் அலறியடித்து ஓட்டம்
/
வயலில் இறங்கிய அரசு பஸ் பயணிகள் அலறியடித்து ஓட்டம்
வயலில் இறங்கிய அரசு பஸ் பயணிகள் அலறியடித்து ஓட்டம்
வயலில் இறங்கிய அரசு பஸ் பயணிகள் அலறியடித்து ஓட்டம்
ADDED : மார் 02, 2025 04:59 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் வயலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று கடலுார் நோக்கி அரசு பஸ் சென்றது. பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றனர்.
விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் பகுதியில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர வயலில் இறங்கி விபத்துக்குள்ளானது.
பஸ்சிலிருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர்.
தகவலறிந்த வளவனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின், மாற்று பஸ் மூலம் பயணிகளை கடலுாருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, ரெக்கவரி வாகனம் மூலம் பஸ் மீட்கப்பட்டது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.