/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிங்கவரம் கோவிலில் பவித்ரோற்சவம்
/
சிங்கவரம் கோவிலில் பவித்ரோற்சவம்
ADDED : ஜூலை 28, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோற்சவ விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. அன்று காலை உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமதே ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அன்று மாலை கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு ஹோமம், சிறப்பு அர்ச்சனை நடந்தது.
மறுநாள் 26ம் தேதி காலை, மாலை சிறப்பு ஹோமமும், சிறப்பு அர்ச்சனை நடந்தது. நிறைவு நாளான நேற்று பகல் 12 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது.
தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு பவித்ர மாலை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.