/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிலுவை குடிநீர் திட்டப் பணிகளை 27ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்: கலெக்டர் பழனி உத்தரவு

ADDED : மே 22, 2024 12:31 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், நிலுவை குடிநீர் திட்டப்பணிகளை வரும் 27ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீதமுள்ள அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் துவக்குதல் குறித்து, மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில், 'மாவட்டத்தில் கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டினை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை வரும் 27ம் தேதிக்குள் முடித்திட வேண்டும்.
மேலும் நிலத்தடி நீரை பாதுகாத்திட நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை தடுக்க சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும்.
மாவட்டத்தில் காலை உணவு திட்டம் 1,048 பள்ளிகளில் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. மேலும் அரசு நிதி உதவிபெறும் 158 ஊராட்சி பள்ளிகளுக்கும் இந்த திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சமையலறை மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து முடித்திட வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் மற்றும் முக்கிய துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.