/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்கள் சேவையே என் முதல் பணி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
/
மக்கள் சேவையே என் முதல் பணி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
மக்கள் சேவையே என் முதல் பணி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
மக்கள் சேவையே என் முதல் பணி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
ADDED : ஏப் 16, 2024 07:24 AM

விழுப்புரம், : விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ் கண்டமங்கலம் ஒன்றியத்தில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமையில் கொங்கம்பட்டு, ராம்பாக்கம், சொரப்பூர், வீராணம், மேல்பாதி, கீழ்பாதி, கோண்டூர், மிட்டா மண்டகப்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கொத்தாம்பாக்கம், பள்ளிநேலியனுார்,ஆழியூர், நவமால்மருதுார் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓட்டு சேரிகத்தார். அனைத்து கிராமங்களிலும் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின்போது வேட்பாளர் பாக்யராஜ் பேசுகையில், 'இந்த பகுதியில் எம்.பி.,யாக இருந்தவர். கடந்த ஐந்தாண்டு காலமாக இந்த பகுதியில் உள்ள உங்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை.
அது மட்டுமல்லாமல் வெற்றி பெற்றவுடன் உங்கள் கிராமத்திற்கு வந்து உங்களை சந்திக்கவில்லை. மீண்டும் அவரே இந்த தொகுதியில் வேட்பாளராக உள்ளார். மக்களாகிய நீங்கள் சிந்தித்து செயல் பட வேண்டும்.
காந்தலவாடி கிராமத்தில் எளிய விவசாய கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். போன் செய்தால் போதும் நானே நேரில் வந்து குறைகளை சரி செய்வேன். மக்களுக்காக உழைப்பேன் மக்கள் சேவையே என் முதல் பணி' என்றார்.
தொடர்ந்து பாக்கம் கூட்ரோட்டில் வானுார் எம.எல்.ஏ., சக்கரபாணி தலைமையில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டவர், தர்பூசணி கடைக்கு சென்று தர்பூசணி பழங்களை வெட்டி பொதுமக்களுக்கு கொடுத்து ஓட்டு சேகரித்தார்.
தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

