/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகரில் தொடரும் போக்குவரத்து விதிமீறல் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
நகரில் தொடரும் போக்குவரத்து விதிமீறல் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
நகரில் தொடரும் போக்குவரத்து விதிமீறல் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
நகரில் தொடரும் போக்குவரத்து விதிமீறல் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : மே 13, 2024 05:51 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் செல்வதால் விபத்துகள் அதிகரிக்கிறது. போலீசார் கண்காணித்து விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை, திருச்சி, புதுச்சேரி நெடுஞ்சாலைகள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலைகளாக உள்ளது. இந்த சாலைகளில் செல்வோர், வெளி மாவட்டங்களில் இருந்து நகர பகுதிக்குள் நுழையும் போது குறைந்தது வேக அளவு மீட்டர் 30ல் மட்டுமே செல்ல வேண்டும்.
ஆனால், பெரும்பாலான வாகனங்கள் 70க்கும் குறையாமல் நகர பகுதிக்குள் ஓட்டிச் செல்கின்றனர். இதனால், சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், வயதானோர் பலர் அந்த வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளது.
இதை கண்காணிக்க வேண்டிய பணிகளில் உள்ள டிராபிக் போலீசார், வட்டார போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் யாரும் கண்டு கொள்வதில்லை.
சென்னை, திருச்சி மற்றும் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக விழுப்புரத்தில் செல்லும் வாகனங்கள் டிராபிக்கில் பாதிக்காமல் செல்ல நான்கு முனை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்னல் ஒரு மார்க்கத்தில் நேரம் முடிந்து மறு மார்க்கத்தில் விழுவதற்குள் நிற்காமல் பல வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இதனால் எதிர்திசையில் சிக்னல் விழுந்தவுடன், வேகமாக வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளது.
இது போல், விழுப்புரம் நகரில் தொடரும் போக்குவரத்து விதிமீறல் செயல்களால் வாகன விபத்துகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை பணிகளில் உள்ள போக்குவரத்து காவல் அதிகாரிகள் கண்காணித்து விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.