/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டு மனை தருவதாக ரூ.25 லட்சம் மோசடி பாதித்த மக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு

ADDED : ஜூலை 06, 2024 05:26 AM

விழுப்புரம்: வீட்டு மனை தருவதாகக் கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
விழுப்புரம் அடுத்த பில்லுார், சகாதேவன்பேட்டை, பிள்ளையார்குப்பம், அவியனுார், சாலையாம்பாளையம், ராமநாதபுரம், பனப்பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
பில்லுார் கிராமத்தை சேர்ந்த ஒருவர், கடந்த 2012ம் ஆண்டு எங்களிடம், தான் பெரியதச்சூர், ஆசூர், உளுந்துார்பேட்டை பகுதிகளில் வீட்டுமனை பிளாட் போட்டுள்ளதாகவும், மாத தவணை முறையில் 5 ஆண்டுகள் பணம் செலுத்தினால் முடிவில் வீட்டுமனை தருவதாக தெரிவித்தார்.
இதை நம்பி, நாங்கள் 150க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு மாதமும் 550, 1,200, 1,500 ரூபாய் வீதம் பணம் செலுத்தினோம். 5 ஆண்டுகளில் ஒவ்வொருவரும் குறைந்தது 30 ஆயிரம் ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை கட்டியுள்ளோம்.
நாங்கள் பணம் செலுத்தி 6 ஆண்டுகளுக்கும் மேலாகியும், வீட்டு மனையை தராமல் ஏமாற்றி வருகிறார். இதனால், பணத்தை திரும்ப தரும்படி கேட்டோம். பணத்தை தராமல் 25 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.