/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே மருத்துவமனை தரம் உயர்த்தக்கோரி மனு
/
ரயில்வே மருத்துவமனை தரம் உயர்த்தக்கோரி மனு
ADDED : மார் 07, 2025 09:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : தெற்கு ரயில்வே வாரியம் சுகாதார சேவைகள் இயக்குநரிடம் ரயில்வே மருத்துவமனை தரம் உயர்த்தக்கோரி தொழிற்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையில், தெற்கு ரயில்வே வாரியம் சுகாதார சேவைகள் இயக்குநர் மான்சிங் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்க தென்மண்டல அமைப்பு செயலாளர் இருசப்பன் தலைமையில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையை சுகாதார அலகாக மாற்றம் செய்ய கூடாது. மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். கூடுதலாக ஊழியர்கள் நியமனம் செய்வதோடு, ஆட்குறைப்பு செய்ய கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.