/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நந்தன் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி அமைச்சர்களிடம் மனு
/
நந்தன் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி அமைச்சர்களிடம் மனு
நந்தன் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி அமைச்சர்களிடம் மனு
நந்தன் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி அமைச்சர்களிடம் மனு
ADDED : ஜூலை 04, 2024 10:01 PM

செஞ்சி : நந்தன் கால்வாயை சீரமைக்க கோரி நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்கத்தினர் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்க தலைவர் அன்பழகன், ஒருங்கிணைப்பாளர்கள் அறவாழி, கார்த்திகேயன், சங்கர், செயலாளர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ்பாபு உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் கிராம விவசாயிகள் நேற்று முன்தினம் டிராக்டர்களில் ஊர்வலமாக வந்து தொகுதியில் இடைத்தேர்தலுக்காக தங்கியுள்ள அமைச்சர் வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் அமைச்சர்களை சந்தித்து அளித்த மனு:
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பனமலையில் உள்ள ஏரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று. 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரிக்கு திருவண்ணாமலை மாவட்டம் துறிஞ்சல் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவர 1970ம் ஆண்டு நந்தன் கால்வாய் அமைக்கும் பணியை துவங்கினர். 1976ம் ஆண்டு பணிகள் முடிந்தன.
ஆனால், திட்டத்தில் இருந்த குறைபாடு காரணமாக 2022ம் ஆண்டு வரை நந்தன் கால்வாயில் தண்ணீர் வரவில்லை. 2022ம் ஆண்டு பொதுப்பணித்துறையும், நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்கத்தினரும் இணைந்து போராடி முதன் முறையாக தண்ணீர் கொண்டு வந்தனர். அதன் பிறகு தடைகள் ஏற்பட்டு தற்போது தண்ணீர் வராமல் உள்ளது.
எனவே இந்த கால்வாயை முழுமையாக சீரமைக்கவும், சாந்தனுார் அணையில் இருந்து துறிஞ்சல் ஆற்றுக்கு தண்ணீர் கொண்டு வரவும் 309 கோடி ரூபாய் மதிப்பில் அரசு அறிவித்த புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.