/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல் வீடு கட்டும் திட்டத்தை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
/
கல் வீடு கட்டும் திட்டத்தை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
கல் வீடு கட்டும் திட்டத்தை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
கல் வீடு கட்டும் திட்டத்தை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
ADDED : மே 14, 2024 05:49 AM
விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே கல்வீடு கட்டும் திட்டத்தை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தொழிலாளி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கண்டாச்சிபுரம் அடுத்த வீரபாண்டி புலிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 42; கூலித் தொழிலாளி. இவர், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு காலை மனு அளிக்க வந்த அவர், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் அவரை அப்புறப்படுத்தி, மனு அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் அளித்த மனு:
எங்கள் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். எனக்கு அரசு கல் வீடு திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட்டதால், கடந்த பிப்ரவரி 19ம் தேதி வீடு கட்டும் பணியை தொடங்கினேன். அப்போது எனது பக்கத்து வீட்டுக்காரர், எனது மனையில், அவரது இடமும் சிறிது வருவதாக கூறி தகராறு செய்தார். எந்தவித ஆவணங்களும் இல்லாமல், கல்வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்தினார்.
இது குறித்து தட்டிக்கேட்ட எங்களை, அவர்கள் தாக்கினர். இது தொடர்பாக அரகண்டநல்லுார் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர் தரப்பிடம் பணம் வாங்கிக்கொண்டு, போலீசார் தொடர்ந்து என்னை வீடு கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என பலமுறை மனு அளித்தும் விசாரிக்காமல், கல்வீடு கட்டும் பணியை தடுத்து வருகின்றனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

