/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கார்டு, ஜாதிச்சான்று கேட்டு கலெக்டரிடம் நரிக்குறவர்கள் மனு
/
ரேஷன் கார்டு, ஜாதிச்சான்று கேட்டு கலெக்டரிடம் நரிக்குறவர்கள் மனு
ரேஷன் கார்டு, ஜாதிச்சான்று கேட்டு கலெக்டரிடம் நரிக்குறவர்கள் மனு
ரேஷன் கார்டு, ஜாதிச்சான்று கேட்டு கலெக்டரிடம் நரிக்குறவர்கள் மனு
ADDED : மே 10, 2024 01:02 AM

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த நத்தமேடு கிராம நரிக்குறவர்கள் ரேஷன் கார்டு, வீட்டு மனைப்பட்டா, ஜாதிச்சான்றிதழ் கோரி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
நத்தமேட்டில் 200க்கும் மேற்பட்டோர் பல தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்களுக்கு ரேஷன் கார்டு, வீட்டு மனைப்பட்டா, ஜாதிச்சான்று உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் அரசு செய்து தரவில்லை.
நாங்கள் அலங்காரப் பொருட்கள், பாசிமணியை விற்று வாழ்கிறோம். மின் கட்டணம், நகராட்சி வரி அனைத்தும் செலுத்துகிறோம்.
இந்நிலையில், வருவாய்த்துறையினர், நாங்கள் வசிக்கும் இடத்தை காலி செய்து கொண்டு வேறு இடத்திற்கு செல்லும்படி கூறுகின்றனர். எங்களுக்கு, நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கான மனைப்பட்டா, ரேஷன் கார்டு மற்றும் ஜாதிச்சான்று உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.