ADDED : ஜூன் 02, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பிடாகம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள திருப்பதி திருமலை பாத யாத்திரை குழுவினர், பொதுமக்கள் நலன் வேண்டி ஆண்டு தோறும் பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
19ம் ஆண்டு பாதயாத்திரை நேற்று புறப்பட்டனர். கோவிலில் இருந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீரமணி குருக்கள், ஆலய அர்ச்சகர் ஏழுமலை தலைமையில் 48 நாள்கள் விரதம் இருந்தும், மாலை அணிந்து 100 பேர் பாத யாத்திரை புறப்பட்டனர்.
6ம் தேதி காலை வடமாள் பேட்டையும், மதி யம் திருச்சானுார், அலமேலுமங்காபுரம் சென்றடைகின்றனர். அன்று இரவு திருப்பதி திருமலைக்கு சென்று வழிபடுகின்றனர்.