/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
/
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 01, 2024 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் அரசு சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடந்த தனியார் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாமிற்கு, மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குனர் காஞ்சனா தலைமை தாங்கினார்.
கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி, செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான் முகாமை துவக்கி வைத்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், செஞ்சி சேர்மன் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், பச்சையப்பன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பங்கேற்றனர்.