/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி புறவழி சாலையில் பூச்செடிகள் நடும் பணி தீவிரம்
/
புதுச்சேரி புறவழி சாலையில் பூச்செடிகள் நடும் பணி தீவிரம்
புதுச்சேரி புறவழி சாலையில் பூச்செடிகள் நடும் பணி தீவிரம்
புதுச்சேரி புறவழி சாலையில் பூச்செடிகள் நடும் பணி தீவிரம்
ADDED : பிப் 22, 2025 05:12 AM

வானுார்: புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், சென்டர் மீடியனில் டெகோமா (நாக செண்பகம்) பூச்செடிகள் நடும் பணி நடந்து வருகிறது.
புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் எதிரெதிரே செல்லும் வாகனங்களுக்கு வெளிச்சம் அடிக்காமல் இருக்க சென்டர் மீடியனில் பூச்செடிகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. சாலை நடுப்பகுதியில் அரளி பூக்களை உள்ளூரை சேர்ந்த சிலர் பறிக்கின்றனர்.
இதனால் சில இடங்களில் பூச்செடிகள் இருந்த அடையாளமே இல்லை. அந்த இடங்களில் டோல்கேட் நிர்வாகம் ஆய்வு செய்து, பூச்செடிகள் வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
முதல் கட்டமாக 12 ஆயிரம் டெகோமா (நாக செண்பகம்) பூச்செடிகள் நடும் பணிகள் துவங்கியுள்ளது.