/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயானக்கொள்ளை ஊர்வலத்தில் பா.ம.க., - வி.சி.,யினர் மோதல் போலீஸ் தடியடி: திண்டிவனத்தில் பதற்றம்

ADDED : பிப் 28, 2025 05:49 AM

திண்டிவனம்: திண்டிவனம் அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை ஊர்வலத்தில் பா.ம.க., - வி.சி., கட்சியினரிடை நடந்த கல்வீச்சு மோதலில் 5 பேர் மண்டை உடைந்தது. போலீசார் தடியடி நடத்தி யதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று 12:15 மணிக்கு கோவிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் காளி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மயானத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டது.
ஊர்வலத்தில் வேண்டுதல் கொண்ட பக்தர்கள் அம்மன் வேடமிட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், சப் கலெக்டர் உத்தரவை மீறி தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கொடியுடன் ஆடி வந்தனர்.
மாலை 5:00 மணிக்கு நேரு வீதி பழைய கோர்ட் எதிரே வி.சி., கொடியுடன் ஆடியவர்களுக்கும், தாலுகா அலுவலகம் அருகில் பா.ம.க., கொடியுடன் ஆடியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அதில், பா.ம.க.,வைச் சேர்ந்த 5 பேர் மண்டை உடைந்தது.
உடன் ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையிலான போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர். இச்சம்பத்தினால், அப்பகுதி போர்க்களம்போல் காணப்பட்டது. கல்வீச்சில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு முடிக்க வேண்டிய மயானக்கொள்ளை ஊர்வலம் மாலை 5:15 மணிக்கு முடித்து வைக்கப்பட்டது.
கடந்தாண்டும் இதேபோன்று இவ்விரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு, போலீஸ் தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.