/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை திருமணம் செய்த பிளம்பர் மீது போக்சோ வழக்கு
/
சிறுமியை திருமணம் செய்த பிளம்பர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை திருமணம் செய்த பிளம்பர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை திருமணம் செய்த பிளம்பர் மீது போக்சோ வழக்கு
ADDED : செப் 16, 2024 06:43 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிளம்பர், அவரது பெற்றோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் அருகே நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் கணபதி, 28; பிளம்பர். இவர், அருகே உள்ள புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனிடையே கடந்த 13ம் தேதி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாமல் சிறுமியை அழைத்து சென்றபோது, கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. திருமண வயதை அடையாத சிறுமி கர்ப்பம் அடைந்ததது குறித்து, சமூக நலத்துறை அதிகாரி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கணபதி மற்றும் சிறுமி திருமணத்திற்கு உடந்தையாக இருந்த கணபதியின் தாய் காவேரி உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.