/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவியை ஏமாற்றிய மாணவன் மீது போக்சோ வழக்கு
/
பள்ளி மாணவியை ஏமாற்றிய மாணவன் மீது போக்சோ வழக்கு
ADDED : செப் 05, 2024 05:28 AM
விழுப்புரம்: பள்ளி மாணவியிடம் தவறாக நடந்த, கல்லூரி மாணவன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த சித்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் படித்து வரும் 16 வயது மாணவியை, அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவன், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்த மாணவன், மாணவியுடன் பல முறை தனிமையில் சந்தித்து தவறாக நடந்துகொண்டுள்ளார். இந்நிலையில், அந்த மாணவன் பேசுவதை தவிர்த்து வந்ததால், அந்த மாணவி கடந்த 2ம் தேதி நேரில் சென்று கேட்டபோது, அந்த மாணவர் அடித்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், அந்த மாணவன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.