/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிற்சாலையில் திருட்டு போலீஸ் விசாரணை
/
தொழிற்சாலையில் திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 03, 2024 06:36 AM
மரக்காணம் : மரக்காணம் அடுத்த குரும்புரத்தில் தகடு தயாரிக்கும் தொழிற்சாலையில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மரக்காணம் சால்ட் ரோட்டைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு, 42; இவர், குரும்புரம் கிராமத்தில் மேற்கூரை தகடுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் தொழிற்சாலை பணிகள் நடைபெறும் இடத்திற்குள் வந்துள்ளனர்.
பின் அங்கிருந்த காவலர் கோவிந்தராஜை தாக்கி விட்டு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கட்டிங் மிஷின்களை திருடிச் சென்றுள்ளனர்.
புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.