/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாய், குழந்தை மாயம் போலீஸ் விசாரணை
/
தாய், குழந்தை மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 31, 2024 03:20 AM
விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த மழவராயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரி மகன் ஸ்டீபன்ராஜ், 25; கூலித் தொழிலாளி. இவரது மனைவி லவினா, 20; மகள் ஹாசினி, 2; கடந்த 28ம் தேதி மதியம் லவினா சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதாக குழந்தையுடன் புறப்பட்டார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ் ஏற்றி விடுவதற்காக, ஸ்டீபன்ராஜ் பைக்கில் அழைத்து வந்தார். பஸ் நிலையத்தில் மனைவி மற்றும் குழந்தையை இறக்கிவிட்டு, சாப்பாடு வாங்கி வர கடைக்கு சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.